"ஸ்டெம்பை தெறிக்க விட்ட தோனி"...ஷாக்காகி நின்ற ஜடேஜா!

Home > தமிழ் news
By |
"ஸ்டெம்பை தெறிக்க விட்ட தோனி"...ஷாக்காகி நின்ற ஜடேஜா!

கீப்பிங் செய்வதற்கு தோனி நின்றாலே பேட்ஸ்மேன்களுக்கு சிறிது நடுக்கம் இருக்கத்தான் செய்யும். ஸ்டம்பிற்கு பின்னால் இருக்கும் அவர் இரண்டு முக்கியமான விஷயங்களில் கில்லாடி. ஒன்று; டிஆர்எஸ் என்னும் ரிவிவ் கேட்பதற்கு. இரண்டு; மின்னல் வேக ஸ்டம்பிங். இதனால் பேட்ஸ்மேன்கள் கவனமாக விளையாடவில்லை என்றால் அவர்களின் விக்கெட் காலி தான்.

 

மும்பையில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில்,தனது மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார்.வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 377 ரன் குவித்தது. இதனையடுத்து, 378 ரன் என்ற இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது. ஜடேஜா வீசிய 28வது ஓவரின் 5வது பந்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பவுலை தோனி ஸ்டம்பிங் செய்தார்.

 

இந்த ஸ்டம்பிங்கை தோனி .08 நொடியில் மின்னல் வேகத்தில் செய்துள்ளார். இதற்கு முன்பு 0.09 நொடியில் ஸ்டம்பிங் செய்ததே தோனியின் சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில், தனது முந்தையை சாதனையை தோனி முறியடித்துள்ளார்.

 

தோனியின் இந்த மின்னல் வேக ஸ்டம்பிங்கை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு பாராட்டி வருகிறார்கள். இது போன்ற விக்கெட் கீப்பர் அமைவது மிக கடினம்.எனவே  கீப்பிங் பணிக்காகவாவது தோனி இந்திய அணியில் உலகக் கோப்பை வரை நீடிக்க வேண்டுமென்று பலரும் வலியுறுத்தியுள்ளனர்.