'சென்னை பீச்சின் மணலில்...மகளுடன் விளையாடும் தல'...வைரலாகும் கியூட் வீடியோ!
Home > தமிழ் newsஇந்திய அணியின் முன்னாள் கேப்டனும்,சென்னை அணியின் செல்ல பிள்ளையுமான தோனி சென்னை கடற்கரையில் மகள் ஜிவாவுடன் விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வருகிறது.
இந்தியா சிமெண்ட்ஸ் துணைத்தலைவர் மற்றும் முற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் 50 ஆண்டு கால பயணத்தின் காபி-டேபிள் புத்தகம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி தனது குடும்பத்துடன் சென்னைக்கு வந்திருந்தார்.
புத்தகம் வெளியீட்டு விழாவிற்கு பின்பு தனது குடும்பத்துடன் சென்னை கடற்கரையில் தனது நேரத்தை செலவிட்டார்.அப்போது தனது மகள் ஜிவாவுடன் கடற்கரையில் ஜாலியாக விளையாடினார்.அந்த வீடியோ காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி பகிர்ந்திருந்தார்.அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.