ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது. போட்டி முடிந்தபின் இந்திய வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றனர். அப்போது முன்னாள் கேப்டன் தோனி நடுவரின் கையில் இருந்த பந்தை கேட்டு வாங்கி சென்றார்.

 

இதனால் அனைத்து சர்வதேசப் போட்டிகளிலும் இருந்து தோனி ஓய்வு பெறப் போகிறாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

''மைதானம் மற்றும் ஆடுகளத்தின் திறன் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக தோனி  பந்தை வாங்கி சென்றார்,'' என தோனி குறித்த வதந்திகளுக்கு ரவிசாஸ்திரி முற்றுப்புள்ளி  வைத்துள்ளார்.

 

இந்தநிலையில் தோனி பேட்டிங்கில் திணறுவதாக முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், " ராகுல்,ரஹானே இருவரையும் அணி நிர்வாகம் போதுமான அளவு பயன்படுத்தவில்லை.4-வது வீரராக களமிறங்க ராகுல் பொருத்தமானவர்.

 

5-வது வரிசையில் ரகானேயை பயன்படுத்தலாம். 6-வது இடத்துக்கு தினேஷ் கார்த்திக்கா அல்லது தோனியா? என்பதை முடிவு செய்யவேண்டும்.7-வது வீரராக ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.

 

2019-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் தோனி இடம்பெற வேண்டுமானால் அவர் தனது வழக்கமான ஆட்டத்துக்கு திரும்ப வேண்டும். இந்திய அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனான தோனி தற்போது பேட்டிங்கில் திணறுகிறார்.அவர் தனது திறமையை அதிகரித்து இன்னும் 1 ஆண்டு அணியில் நீடிக்க வேண்டும்,'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS