'கேப்டன்' ரோஹித் என்னை பந்து வீசச்சொன்னார், நான் தோனியைப் பார்த்தேன்
Home > தமிழ் newsஇந்திய அணியின் கூல் கேப்டன், வெற்றிக்கேப்டன் மற்றும் இளம் இந்திய வீரர்களின் ரோல் மாடல் என புகழப்படுபவர் தோனி.
பெரும்பாலான இந்திய வீரர்கள் தோனியின் ஆலோசனைகள்,யுக்திகள் அவரின் கேப்டன் பொறுப்பினை பல்வேறு தருணங்களில் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சுழற்பந்து வீச்சாளர் யஷ்வேந்திர சாஹல், தோனியின் ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,'' தோனி பிறரது உடல்மொழிகளை வைத்தே அவர்களின் மனநிலையை வைத்தே அறிந்து கொள்வார்.ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் கேப்டன் ரோஹித், தோனியிடம் அலோசனை பெற்று என்னை பவர் பிளேவில் பந்துவீசக் கூறினார். இருப்பினும், நான் தோனியை ஒருமுறை பார்த்தேன். அவர் என்னிடம் ஓடிவந்து ஸ்டெம்ப்பை நோக்கி வீசு என்றார். நானும் அவ்வாறே செய்தேன்.எனக்கு இமாம் உல் ஹக்கின் விக்கெட் கிடைத்தது.
இதுபோல பல முறை அவர் எனக்கு உதவி இருக்கிறார். அவரால்தான் எனக்கு விக்கெட்டுகள் கிடைத்தன.நான் மட்டும் அல்ல அனைத்து பந்துவீச்சாளர்களும் தோனியிடம் களத்தில் விளையாடும்போது அவர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை தீர்த்துக்கொள்வர்.விராட் கோலி சிறந்த கேப்டன் என்றாலும், அவரும் சந்தேகம் ஏற்படும்போது தோனியிடம் தான் கேட்பார்.மொத்தத்தில் தோனி அணியில் இருப்பது எங்களது அதிர்ஷ்டம்,'' என தெரிவித்துள்ளார்.