'மிஸ்டர் கூல்' என்று அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, குல்தீப் யாதவ்விடம் சத்தம் போட்ட விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 

தனியார் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தோனியின் கோபம் குறித்து தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் பேசுகையில், "கடந்த ஆண்டு ரோஹித் சர்மா தலைமையின் கீழ் இந்திய அணி இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நான் பந்து வீசினேன். பந்தை தூக்கி வீசியபோதெல்லாம் சிக்சருக்கு பறந்தது.ஒவ்வொரு சிக்சருக்கு பின்னும் நான் மஹி பாயைப் பார்க்க அவர் இன்னும் தூக்கி வீசு விக்கெட் விழும் நேரம் தூரத்தில் இல்லை,'' என்பார்.

 

நான் போட்டியின் 4வது ஓவரை வீசிய போது பேட்ஸ்மென் என் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி அடித்தார். அப்போது தோனி என்னிடம் வந்து கவரில் உள்ள பீல்டரை அகற்றி டீப்பில் நிறுத்துமாறும்,பாயிண்ட் பீல்டரை முன்னால் வரச்செய்யுமாறும் அறிவுரை கூறினார்.

 

பதிலுக்கு நான்,''இல்லை மஹி பாய், இப்போது உள்ள வியூகம் சரிதான் என்றேன். நான் இப்படிக் கூறியதைக் கேட்டதும் 300 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளேன் நான் என்ன பைத்தியமா? என்று சத்தம் போட்டார்,'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

அந்தப் போட்டியில் 52 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை குல்தீப் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS