ஒரே ஒரு வீடு.. ரூ.2.8 கோடி மோசடி.. 5 பேரை சுற்றலில் விட்ட தாய்-மகள்!

Home > தமிழ் news
By |

தாயும் மகளும் சேர்ந்து போலி ஆவணங்களைக் காட்டி தங்கள் வீட்டினை 5 பேரிடம் சாமர்த்தியமாக விற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரே ஒரு வீடு.. ரூ.2.8 கோடி மோசடி.. 5 பேரை சுற்றலில் விட்ட தாய்-மகள்!

டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியைச் சேர்ந்த 65 வயதான தாய்  மோலி கபூர் மற்றும் அவரின் 43 வயதான மகள் அனுராதா கபூர் இருவரும் கூட்டாக இணைந்து இத்தகைய காரியத்தைச் செய்துள்ளனர்.

டெல்லியில் தங்களது சொந்த வீட்டில் வசித்து வந்த இவர்கள் இருவரும், தங்களது வீட்டை  2.8 கோடி ரூபாய்க்கு விற்கப்போவதாகக் கூறி 2014-15-ஆம் ஆண்டு இடைவெளியில், கிட்டத்தட்ட 5 பேருடன் ஒப்பந்த உடன்படிக்கை செய்துகொண்டு தலைக்கு 60 லட்சம் ரூபார், 1 கோடி ரூபாய் என வசூலித்து மொத்தமாக இரண்டரை கோடி ரூபாயை அட்வான்ஸாக வாங்கிக்கொண்டு தாயும் மகளும் பறந்துள்ளனர்.

பணம் கொடுத்த பார்ட்டிகள் போன் செய்து பார்த்ததற்கு வந்த பதில் ‘ஸ்விட்ச் ஆஃப்’ என்பதுதான். உடனே வெகுண்டெழுந்தவர்கள் தாய், மகள் இருவர் மீதும் வெவ்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். அந்த புகாரைக் கொண்டு, போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையின்போது தாய்-மகள் இருவரும் பிடிபட்டனர். பின்னர் இருவரும் மோசடி செய்த பணத்தை எடுத்துக்கொண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை  உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா சென்றதாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் மகள் அனுராதா கபூர் லண்டனின் புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தில் மேலாண்மை படித்தவராம். ஆனால் சீக்கிரம் பணம் சம்பாதிப்பதற்காக தனது தாயாரையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டு இந்த மோசடியை அனுராதா செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

BIZARRE, CHEAT