'கவலைப்படாதே பாட்டி'.. காண்பவர்களை கண்கலங்க வைத்த புகைப்படம்!
Home > தமிழ் news
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படமொன்று,காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.
காய்கறி மார்க்கெட்டில் பரிதாபமாக அமர்ந்திருக்கும் வயதான பாட்டி ஒருவருக்கு, குரங்கு ஒன்று ஆறுதல் கூறுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் பாட்டி ஒருவர் தனது கவலைகளை சொல்லி புலம்புவது போலவும், அவரிடம் 'கவலைப்படாதே பாட்டி' நான் இருக்கிறேன் என குரங்கு ஆறுதல் கூறுவது போலவும் அந்த புகைப்படம் அமைந்துள்ளது. இந்த புகைப்படம் எதற்காக எடுக்கப்பட்டது? என்ற விவரங்கள் தெரியவில்லை.
எனினும் கூட்டுக்குடும்பத்தின் அவசியத்தை வலியுறுத்துவது போல அமைந்திருக்கும் இந்த புகைப்படம், பார்ப்பவர்களின் மனதை உருகச்செய்துள்ளது.
MONKEY