'அடேங்கப்பா என்ன அடி'.. 4 ஓவர்ல மொத்த மேட்சையும் முடிச்சுட்டாரே!
Home > தமிழ் newsடி10 தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர் முமகது சேஷாத் அதிரடியாக விளையாடி மைதானத்தையே அதிர வைத்தார்.
கிரிக்கெட் தொடரில், டி20 போட்டிகள் மிகவும் பிரபலமானதாக கருதப்படுகிறது.அந்த வகையில் டி10 போட்டிகள் தற்போது பிரபலமாகி வருகிறது.இந்த டி10 தொடர் கடந்த ஆண்டு முதல் துபாயில் நடந்து வருகிறது. எட்டு அணிகள் பங்குபெறும் இந்த தொடரில் பல்வேறு நாட்டு முன்னணி வீரர்கள் கலந்துகொண்டு விளையாடுகின்றனர். இந்த ஆண்டுக்கான தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று தொடங்கியது. டிசம்பர் 2 ஆம் தேதி வரை இந்த தொடர் நடக்கிறது.
நேற்று நடந்த லீக் போட்டியில் ஷேன் வாட்சன் தலைமையிலான சிந்தி அணியும் பிரெண்டன் மெக்குலம் தலைமையிலான ராஜ்புத்ஸ் அணி யும் மோதின. டாஸ் வென்ற சிந்திஸ் அணியின் கேப்டன் வாட்சன்,பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.சிந்திஸ் அணியானது 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது. வாட்சன் 42 ரன் குவித்தார்.
இதையடுத்து ராஜ்புத்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மெக்குலமும் முகமது சேஷாத்தும் (ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் ) களமிறங்கினார்.போட்டியின் தொடக்கத்திலிருந்தே சேஷாத் வாணவேடிக்கை காட்டினார்.அவர் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார்.அவர், பவுண்டரி, சிக்சர் என பௌலர்களையும்,பீல்டிங்கில் இருந்த வீரர்களையும் ஓட விட்டார்.
இதனால், வெறும் 16 பந்துகளில் அவர் 74 ரன்களை குவித்தார். இதில் எட்டு சிக்சர்களும் நான்கு பவுண்டரிகளும் அடங்கும். 12 ரன்களில் அரைச் சதம் அடித்து சாதனைப் படைத்தார். இவரது அபார ஆட்டத்தால் ராஜ்புத்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெறும் 4 ஓவர்களில் இலக்கை அடைந்து அந்த அணி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
நாலா புறமும் பந்துகளை சிதற விட்டு அதிரடி காட்டிய முமகது சேஷாத்திற்கு இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.