பாப்கார்ன் அதிக விலைக்கு விற்பதாக தியேட்டர் மேனேஜரை, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் அடித்து உதைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஸ்நாக்ஸ் விலை தாறுமாறாக உள்ளதாக, மும்பை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உணவுப் பொருட்களின் கட்டணத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என  உத்தரவிட்டனர்.

 

இந்தநிலையில், புனேயில் உள்ள தியேட்டர் ஒன்றில் இன்று நுழைந்த மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் உணவுப்பொருட்கள் விலையை குறைக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் குறைக்கவில்லை? என மேனேஜரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

மேலும், 5 ரூபாய் பாப்கார்னை 250 ரூபாய்க்கு விற்பதாகக் கூறி அவர்கள் மேனேஜரை அடித்து உதைத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

BY MANJULA | JUN 29, 2018 4:22 PM #MUMBAI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS