புதிய பெயரில் உருவாகிறதா 'புதிய கட்சி’ ? : அழகிரி விளக்கம்!

Home > தமிழ் news
By |
புதிய பெயரில் உருவாகிறதா 'புதிய கட்சி’ ? : அழகிரி விளக்கம்!

திமுக தலைவராக, கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, கலைஞரின் இன்னொரு மகனான மு.க. அழகிரி, தனித்த பேரணி ஒன்றை நடத்தினார். ஆனால் அந்த பேரணி கலைஞருக்கு மரியாதை செலுத்துவதற்காகவே என்று தீர்க்கமாகச் சொன்னார்.


அதன்பின், மு.க.ஸ்டாலின் தன்னை கட்சியில் சேர்த்தால், தான் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார் என்றும் தன்னை சேர்த்துக்கொள்ளாவிட்டால் தி.மு.க பின்விளைவுகளை சந்திக்கும் என்றெல்லாம் கூறியிருந்தார். ஆனால் அழகிரியின் ஆதரவாளரான இசக்கிமுத்து, அழகிரி, ‘கலைஞர் எழுச்சி பேரவை’ என்கிற பெயரில் புதிய கட்சியை தொடங்கவிருப்பதாக கூறியிருந்தார்.      


இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தான் புதிய கட்சியை தொடங்கவிருப்பதாக இசக்கிமுத்து தெரிவித்தது மற்றும் கருணாநிதி பெயரில் புதிய அமைப்பு தொடங்கவிருப்பதாக தான் ஆலோசனை செய்து வருவதாக கூறியதும்  அவரது சொந்த கருத்துதானே தவிர தன்னுடையதல்ல என்று அழகிரி தெரிவித்துள்ளார்.

DMK, MKSTALIN, MKARUNANIDHI, MKAZHAGIRI, MKALAGIRI