பதவியில் இருந்து ராஜினாமா: #MeToo-வின் கீழ் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட எம்.ஜே.அக்பர்!

Home > தமிழ் news
By |
பதவியில் இருந்து ராஜினாமா: #MeToo-வின் கீழ் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட எம்.ஜே.அக்பர்!

மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் தன் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். 90-களில் பத்திரிகையாளராக இருந்த எம்.ஜே.அக்பர் தனக்கு கீழே பணிபுரிந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக #MeToo ஹேஷ்டேகின் குற்றச் சாட்டுகளின் கீழ் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி தெரிவித்திருந்தார்.

 

இதனையடுத்து, கட்சி மேலிடம் எம்.ஜே.அக்பரை பதவி விலகக் கோரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக ப்ரியா ரமணி மீது அவதூறு வழக்கு போட்ட எம்.ஜே.அக்பர், தற்போது தனது பதவி விலகலை அறிவித்துள்ளார். 

 

அவருடைய ராஜினாமா கடிதத்தில் தனக்கு இந்த பதவி கிடைத்ததற்கு பிரதமர் மோடி மற்றும் சுஷ்மாவுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, இந்த வழக்கினை அரசு சார்ந்த பலத்துடன் சந்திக்க தயாராக இல்லை என்றும், தன் மீது விழுந்துள்ள இந்த அவப்பெயரை தனது ஆளுமையைக் கொண்டே சந்திக்கப்போவதால் இந்த ராஜினாமா கடிதம் என்றும் கூறியுள்ளார். 

METOO, METOOINDIA, SEXUALABUSE, BJP, MJAKBAR, PRIYARAMANI