பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன், ஊட்டியில் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மஹாஷே-மாடால்ஷா இருவரின் திருமணம் கடந்த 7-ம் தேதி ஊட்டியில் உள்ள பிரமாண்ட நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவிருந்தது. ஆனால் மஹாஷே தன்னை ஏமாற்றி விட்டதாக நடிகை ஒருவர் அவர்மேல் புகார் அளித்தார்.

 

இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் ஊட்டியில் நடைபெறவிருந்த மஹாஷே-மடால்ஷா திருமணத்தை, புகாரின் பேரில் நேரில் சென்று போலீசார் தடுத்து நிறுத்தினர். திருமணம்  நின்றாலும் டெல்லி நீதிமன்றம் மஹாஷே வுக்கு முன்ஜாமீன் வழங்கியது.

 

இந்தநிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை ஊட்டியில் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான ரிசார்ட்டில் மஹாஷே-மடால்ஷா ரகசிய திருமணம் இருவீட்டார் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. தற்போது இருவரது திருமண புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

BY MANJULA | JUL 11, 2018 3:38 PM #MARRIAGE #OOTY #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS