டாஸ்மாக் வருமானத்தை வைத்தே ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது.. அமைச்சர்!
Home > தமிழ் newsடாஸ்மாக்கை தமிழக அரசே ஏற்று நடத்தத் தொடங்கிய பிறகு அதன் வருமானம் ஏறுமுகத்தில்தான் உள்ளது. வருடாவருடம் பண்டிகை நாட்களுக்கு முன்னரே இலக்கு வைத்து டாஸ்மாக் நடத்தப்படுவதாக ஜெயலலிதா ஆட்சியின் போதிலிருந்தே அறிவிக்கப்பட்டு வந்தது.
இடையிடையே பெண்கள் பல போராட்டங்களை நடத்தியதால் மெயின் ரோடுகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டு சாலைகளின் உட்பகுதிகளுக்கு மாற்றப்பட்டன. இந்த டாஸ்மாக்கினால் பலர் குடித்து வீண் ஆவதாக ஆங்காங்கே போராட்டங்கள் ஒருபுறம் நடக்க, அமைச்சர் கே.சி. வீரமணி இன்று பேசிய பேச்சில், டாஸ்மாக் குடிமகன்கள் அடித்த சரக்கின் போதை இறங்கும் அளவுக்கு ஒரு தகவலைக் கூறியுள்ளார்.
ஆம், அதன்படி, டாஸ்மாக் கடை வருமானம் முழுவதும் தன்னுடைய துறைக்குதான் வருவதாகவும் அதை வைத்துதான் புதிய பள்ளிகள் கட்டப்படுகின்றன என்றும் வணிக அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கூட அதில் வரும் வருமானத்தை வைத்துதான் சம்பளம் கொடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் சின்னமூக்கனூர் அரசுப்பள்ளி விழாவில் பேசியபோது அவர் இத்தகவலைக் கூறியுள்ளது பலரிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.