தீபாவளிக்கு அரசுப்பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்த எதிரொலி: அமைச்சரின் அதிரடி அறிவிப்புகள்!

Home > தமிழ் news
By |
தீபாவளிக்கு அரசுப்பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்த எதிரொலி: அமைச்சரின் அதிரடி அறிவிப்புகள்!

ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களின் நிலுவை சம்பளம், போனஸ் உள்ளிட்டவை பற்றி மத்திய-மாநில அரசுகள் அக்கறை கொள்ளவில்லை என  குற்றம் சாட்டி, தமிழக போக்குவரத்து ஊழியர்கள்  நாளை வேலைநிறுத்தம்  அறிவிக்க திட்டமிட்டிருந்ததாகவும், இதனால் தீபாவளிக்கு அரசுப்  பேருந்துகள் இயக்கம்  பாதிக்குமா? என்பன போன்ற கேள்விகளும் எழுந்திருந்தன.

 

இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று 20% போனஸ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனையொட்டி தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும் எனவும், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் அறிவித்துள்ளதோடு, தீபாவளி முன்பணமாக ரூ.45 கோடி வழங்கப்படும் என்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களின் நிலுவைத் தொகையாக ரூ.251 கோடி அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.


இதையெல்லாம்  மீறி ஒருவேளை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அதற்கும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து தீபாவளிக்கு அரசு பேருந்துகள் முழுமையாக இயங்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

AIADMK, TNSTC, TAMILNADU, TRANSPORTCOMMISSION, FESTIVAL, PREBOOKINGS, TNBUSSTRIKE, SETC