96 BNS Banner
Ratsasan BNS Banner

'ரூபாய் 7 கோடி மதிப்பிலான கல்லை'.. 30 வருடங்களாக கதவுக்கு முட்டுக்கொடுத்த மனிதன்!

Home > தமிழ் news
By |
'ரூபாய் 7 கோடி மதிப்பிலான கல்லை'.. 30 வருடங்களாக கதவுக்கு முட்டுக்கொடுத்த மனிதன்!

ரூபாய் 7.37 கோடி மதிப்பிலான விண்கல்லை, 30 வருடங்களாக அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கதவுக்கு முட்டுக் கொடுக்க பயன்படுத்திய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தை சேர்ந்த ஒருவர் அதே பகுதியை சேர்ந்த பேராசிரியர் ஒருவரிடம் தனது வீட்டில் முட்டு கொடுக்க பயன்படுத்தி வந்த விண்கல் ஒன்றை கொடுத்து சோதனை செய்ய சொல்லியுள்ளார்.

 

அந்த கல்லை சோதனை செய்த பேராசிரியர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். காரணம் அது ஒரு விண்கல் ஆகும். இதுகுறித்து பேராசியர் மோனா கூறுகையில்,''இது 1930-ம் வருடம் மெக்சிகனின் எட்மோட் பகுதியில் உள்ள விளைநிலத்தில் விழுந்தது. இதனை நான் வாஷிங்டனில் உள்ள புகழ்பெற்ற ஆய்வு மையத்தில் கொடுத்து ஆய்வு செய்தேன். என் வாழ்நாளில் இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த கல்லை நான் ஆராய்ச்சி செய்ததில்லை,'' என தெரிவித்துள்ளார்.

 

இந்த கல்லின் உரிமையாளர் இதுகுறித்து கூறும்போது,'' நான் கடந்த 1988-ம் ஆண்டு இந்த நிலத்தை வாங்கினேன்.அப்போது இந்த கல் எனக்குக் கிடைத்தது. இந்த நிலத்தின் முன்னாள் உரிமையாளர் 1930-ம் ஆண்டு இந்த கல் தனது நிலத்தில் இருந்ததாகக் கூறினார்.நீண்ட நாட்களாக இந்த கல்லை பற்றி எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதனை உறுதி செய்து கொள்ளவே சோதனைக்கு இந்த கல்லை அளித்தேன்,'' என விளக்கமளித்துள்ளார்.

AMERICA, METEORITE