'அட போங்க பாஸ்'...ஸ்மித், வார்னர் இருந்திருந்தா மட்டும் ஜெயிச்சிருக்க முடியுமா? மீம்ஸ்களை தெறிக்க விடும் நெட்டிசன்கள்!

Home > தமிழ் news
By |
'அட போங்க பாஸ்'...ஸ்மித், வார்னர் இருந்திருந்தா மட்டும் ஜெயிச்சிருக்க முடியுமா? மீம்ஸ்களை தெறிக்க விடும் நெட்டிசன்கள்!

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 10 ஆண்டுக்கு பின் அரிய வெற்றியை பதிவு செய்ததோடு, சுமார் 70 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் வெற்றி பெற்று வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது.இதனால் இந்திய ரசிகர்கள் கடும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

 

அடேலைட் மைதானத்தில்  இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியானது நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் இந்திய அணி 250 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் புஜாரா 123 (146) ரன்கள் குவித்தார். பின்னர் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி,இந்திய வீரர்களின் சுழற்பந்து வீச்சிற்கு தாக்கு பிடிக்க முடியாமல்,அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து,235 ரன்களில் சுருண்டது. இந்திய அணியில் பும்ரா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் இந்திய அணி 307 எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் புஜாரா 71 ரன்கள் மற்றும் ரஹானே 70 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியின் லையான் அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளை சாய்த்தார். இதைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 291 ரன்களில் ஆல் அவுட் ஆகி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி அபாரமான வெற்றியை பெற்றது.

 

இந்நிலையில் இந்திய அணியின் வெற்றியை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.இது ஒருபுறமிருக்க ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாதது தான்,இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் என ஒரு தரப்பினர் கருத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.இவ்வாறு பதிவிட்டு வருபவர்களை ஆஸ்திரேலிய சொம்பு என 'மீம்ஸ்' வாயிலாக கலாய்த்து வருகிறார்கள் சில நெட்டிசன்கள்.

 

அதே போன்று செத்து போன ஆஸ்திரேலிய டீமை ஜெயிப்பதெல்லாம் ஒரு பெருமையா எனவும் சிலர் மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.இருப்பினும் இந்திய அணியினை பாராட்டி பல மீம்ஸ்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.அதிலும் குறிப்பாக கேப்டன் கோலியை பாராட்டி,பல மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

CRICKET, BCCI, VIRATKOHLI, MEMES CREATORS, TEAM INDIA