சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக பொதுமக்களின் குரல்களும்  ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

 

மேலும் பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும் என்றும், பொதுமக்கள் ஆவேசமாகக் குரல் கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைசெய்யப்படுவதற்கு எதிரான பொதுநல வழக்கு ஒன்று சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இது தொடர்பாக மத்திய அரசு ஒரு கடிதத்தை உச்சநீதிமன்றத்தில் அளித்தது.

 

அதில், '12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கும் வகையில் ‘போஸ்கோ’ சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இதைத் தொடர்ந்து இந்தவழக்கு ஏப்ரல் 27-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 

BY MANJULA | APR 20, 2018 4:58 PM #CHILDABUSE #ASIFA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS