குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவரால் டிராஃபிக் காவலருக்கு சரமாரி தாக்கு!
Home > தமிழ் news
கர்நாடகாவின் தேவநாகிரியில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிவந்த வாகன ஓட்டிகளை, போக்குவரத்து காவலர்கள் நிறுத்தியுள்ளனர். குடித்துவிட்டு வண்டி ஓட்டி வந்த அவர்களிடம் வினவிய போக்குவரத்து காவலர்களின் மீது கோபம் கொண்ட குடிமகன் ஒருவர், திடீரென, போக்குவரத்து காவலர்களை தாக்கத் தொடங்கினார்.
சரமாரியாக அருகில் இருந்த பானைகளை எடுத்து சிறிதும் யோசிக்காமல், போக்குவரத்து காவலரின் தலையிலேயே அடித்து, சாலையில் வீழ்த்திக் கிடத்தினார். அதன் பிறகும் அவரது கழுத்தினை பிடித்து சாலையில் தள்ளி, ரத்தக் காயங்கள் உண்டாகும் வகையில் அவர்களை தாக்கியபோது சுற்றி நின்று பலரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
எனினும் அங்கிருந்த ஒருவர், போக்குவரத்து காவலருக்கு அடிபட்ட ரத்தத்தை துடைத்தார். இறுதியில் அந்த குடிமகனை போக்குவரத்துக் காவலர்கள் கைது செய்தனர். மேலும், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#WATCH: A man who was allegedly drunk assaulted two traffic policemen in Karnataka's Davangere earlier today. Police arrested the man and a case has been registered against him. pic.twitter.com/kahGksU0A7
— ANI (@ANI) October 10, 2018