ராமலீலையில் ராவணனாக நடித்தவர், அமிர்தசரஸ் ரயில் விபத்தில் பலியான சோகம்!

Home > தமிழ் news
By |
ராமலீலையில் ராவணனாக நடித்தவர், அமிர்தசரஸ் ரயில் விபத்தில் பலியான சோகம்!

ராம்லீலா-வில் ராவணனாக வேடம் அணிந்து கூத்தாடியவரும் அமிர்தசரஸ் ரயில் விபத்தில் இறந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும், அவரது குடும்பத்தினரிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தசரா விழாவை முன்னிட்டு பஞ்சாபின் அமிர்தசரஸில் சௌரா பஸாரில் நிகழ்ந்த ராம்லீலா எனப்படும் ராமலீலை கூத்து நடைபெற்றது. கூத்து முடிந்து இறுதியில் ராவணனின் கொடும்பாவி எரிப்பது வழக்கம். 

 

இந்த நிலையில் பண்டிகையை வேடிக்கை பார்த்தவர்கள், விழாவில் முக்கிய பங்காற்றியவர்கள் என பலரும் நின்று கொண்டிருக்க, ராவண கொடும்பாவி எரிக்கப்பட்டது. அப்போது எதிராபாராத விதமாக அந்த இரவில் தன் தடத்தின் வழியே வந்த ரயில் வழியில் நின்றவர்கள் மீது மோதி வெள்ளத்தைப் போல் அடித்து நசுக்கிவிட்டுச் சென்றதில் 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே துண்டாகி பலியாகினர். 

 

நாடு முழுவதும் பெருத்த சோகத்தை உண்டாக்கிய இச்சம்பவத்தில் திடுக்கிடும் மேலுமொரு தகவலாக வந்ததுதான் தல்பர் சிங்கிங் இறப்பு சம்பவம். இந்த ராமலீலையில் ராவண வேடம் கட்டி ஆடிய தல்பர் சிங்கும் ரயில் மோதி பலியாகியுள்ளார்.  8 மாத குழந்தையுடைய அவரது மனைவிக்கு அரசு பணி கொடுத்தால் அவர்களது வாழ்க்கை ஒளிமயமாகும் என்று தல்பர் சிங்கின் தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

DUSSEHRA, AMRITSAR, AMRITSARTRAINACCIDENT, RAMLILA, RAVANEFFIGY, DALBIR SINGH, DASARA