கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம்: ரத்ததானம் செய்த இளைஞர் தற்கொலை!
Home > தமிழ் newsசாத்தூர் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தம் வழங்கப்பட்ட விவகாரத்தில் மருத்துவ பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, அந்த பெண்ணுக்கும் எச்.ஐ.வி பரவியதால், சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் வரை இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இறுதியில் அரசு செலவில், அந்த பெண்ணிடம் இருந்து எச்.ஐ.வி’யானது குழந்தைக்கு பரவாமல் தடுக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டது. அந்த நிலையில்தான் சிவகாசி ரத்த வங்கியில் ஏற்கனவே ரத்த தானம் வழங்கியிருந்த இளைஞர் தானாக முன்வந்து தான் ரத்தம் கொடுத்ததையும், அதன் பின்னர் தனது உடற்பரிசோதனையின்போது தனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதை தெரிந்துகொண்டவுடன், உடனே அந்த ரத்தத்தை வழங்கவேண்டாம் என்று தகவல் அளிக்க முயன்றதாகவும் ஆனால் அதற்குள் எல்லாம் நடந்துமுடிந்துவிட்டதையும் கூறினார்.
அவரை பலர் பாராட்டினாலும், நடந்து முடிந்த இந்த தவறுக்காக குற்றவுணர்ச்சியில் அந்த இளைஞர் எலி மருந்தினை உட்கொண்டார். அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்தும் பலனின்றி தற்போது அவர் உயிரிழந்துள்ளார்.