'தற்கொலை' செய்து கொள்ள கிணற்றில் குதித்தவர் 'தண்ணீர்' இல்லாததால் உயிர் தப்பினார்!

கரூர் மாவட்டம் ராமகிருஷ்ணபுரத்தின் அருகேயுள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து சத்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து எட்டிப்பார்த்தனர்.

 

அப்போது உள்ளேயிருந்த நபர் ஒருவர் தன்னைக் காப்பாற்றுமாறு சத்தம் போட்டார். இதனையடுத்து தகவலின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து கிணற்றுக்குள் இருந்த நபரை கயிறு மூலம் மீட்டனர்.

 

போலீஸ் விசாரணையில் கிணற்றில் விழுந்தவர் பெயர் ஞானப்பிரகாசம் என்றும் கடன் தொல்லையால் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரியவந்தது. கிணற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால் அவரின் தற்கொலை முயற்சி பலிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

 

BY MANJULA | MAY 8, 2018 10:55 AM #SUICIDEATTEMPT #KARUR #TAMILNADU #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS