’கண்ணே கலைமானே’.. யானைக்கு தாலாட்டு பாடி தூங்கவைக்கும் இளைஞர்.. வைரல் வீடியோ!
Home > தமிழ் newsகேரளாவைச் சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவர் தான் வளர்க்கும் வினயசுந்தர் என்கிற 40 வயது யானையை பாட்டுப்பாடி தூங்க வைக்கும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் பூரக்களி எனும் யானைகளுக்கு முக்கியத்துவமான ஒரு விழா சமயத்தில் மேடையில் பாடும் ஸ்ரீகுமாரின் பாடலை அதே விழாவில் இருந்த யானை வினயசுந்தர் கேட்டு மகிழ்ந்ததை அதன் உரிமையாளர் ஸ்ரீகுமாரிடம் சொல்லவும், அங்குதான் தொடங்கியது ஸ்ரீகுமாருக்கும் அவர், குஞ்சன் என்று செல்லமாக பெயர் வைத்துள்ள வினய சுந்தருக்கும்.அன்று முதல் இன்று வரை ராசாத்தி உன்னை, கண்ணே கலைமானே, பாட்டு பாடி உறக்கம் ஞான் (சீதா எனும் மலையாள படம்) போன்ற பாடல்களை பாடி தூங்க வைக்கிறார்.
‘நான் பேசும், பாடும் மொழி குஞ்சனுக்கு புரிகிறதா என தெரியவில்லை.. ஆனால் எங்களுக்குள் ஒரு பிணைப்பு இருக்கிறது. அது விவரிக்க முடியாதது.. எனக்கு குஞ்சன் குழந்தை போல’ என்று கூறும் ஸ்ரீகுமார், குஞ்சனை மங்களம் நேருன்னு எனும் மலையாள படத்தில் இருந்து ஆலியாலம் பூவே என்கிற தாலாட்டு பாடலை பாடி தூங்க வைக்கும் காட்சிதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Man sings elephant to sleep with lullaby in Kerala, India pic.twitter.com/npcPZD3sgY
— China Xinhua News (@XHNews) October 19, 2018