தள்ளுபடி இல்லை என்று சொன்னதால், ஷாப்பிங் மால் கடைகாரருக்கு நேர்ந்த கொடூரம்!
Home > தமிழ் newsஉத்திர பிரதேசம் வாரணாசியில் உள்ள பிரபல ஜெ.எச்.வி மாலில், டிஸ்கவுண்ட் கொடுக்காத காரணத்தால் அந்த மாலில் இருந்த இரண்டு ஊழியர்கள கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசத்தில் பெருகிவரும் துப்பாக்கிக் கலாசாரத்தால் நிகழ்ந்த இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்குள்ள துணி கடை ஒன்றில், துணி வாங்குவதற்காக இரண்டு மர்ம நபர்கள் வந்துள்ளனர். வந்தவர்கள் கடை ஊழியரிடம் தாங்கள் வாங்கிய துணிக்காம தள்ளுபடியை அசல் தொகையில் இருந்து அதிகமாக செய்து தருமாறு கேட்கவும், கடைகாரரோ கொடுக்க முடியாது என்று கூறவும், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உருவாகியுள்ளது.
திடீரென எதிர்பாராத சூழலில், ஊழியர்களை கடைக்கு வந்த இரண்டு நபர்களில் ஒருவர், துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளார். இதனை அடுத்து கடை ஊழியர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியானதை அடுத்து, துப்பாக்கியுடன் அங்கு கூடியிருந்த மக்களை பயமுறுத்துக்கொண்டே தப்பி ஓடியுள்ளனர். காவல் துறையினர் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை பரிசோதித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.