96 BNS Banner
Ratsasan BNS Banner

ஓடும் லாரியின் பின்னால், "வைரலாகும்" இளைஞர் செய்த வேலை!

Home > தமிழ் news
By |
ஓடும் லாரியின் பின்னால், "வைரலாகும்" இளைஞர் செய்த வேலை!

மும்பையின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் சென்ற சரக்கு லாரியின் பின்னல் ஊஞ்சல் கட்டி ஆடிய நபரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 


தற்போது வித்தியாசமாக நடக்கும் எந்த சிறு சம்பவமும்  யாரோ ஒருவரால் வீடியோவாக எடுக்கப்பட்டு வைரலாகி விடுகிறது.அதே போல் ஒரு சம்பவம் தற்போது மும்பையில் நடந்துள்ளது.

 

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மும்பையும் ஒன்று.அங்கு நேற்று முன்தினம் இரவு சரக்கு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது.அந்த லாரியின் பின்னால் பொருட்கள் வைக்கும் இடத்தில் வாலிபர் ஒருவர் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டு வந்தார்.இதை பின்னல் இருசக்கரவாகனத்தில் வந்த நபர் வீடியோவாக  எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிவிட்டார்.

 

அந்த வாலிபர் ஊஞ்சலாடும் வீடியோ பதிவேற்றப்பட்ட சிறிது நேரத்தில் 70,000 பேர் அந்த விடியோவை பார்வையிட்டுள்ளனர்.ஆனால் மிகுந்த ஆபத்தான முறையில் அந்த வாலிபரின் செயல் அமைந்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

MUMBAI, MAN RIDES SWING, MUMBAI TRAFFIC