’கலாரசிகன்யா’.. என்னைக்காவது இப்படி பாட்டு கேட்டு ரசிச்சிருப்போமா?

Home > தமிழ் news
By |
’கலாரசிகன்யா’.. என்னைக்காவது இப்படி பாட்டு கேட்டு ரசிச்சிருப்போமா?

ஒரு பாட்டை கேட்கலாம். ரசிக்கலாம். திருப்பி திருப்பி அதே பாடலை கேட்டுக்கொண்டிருந்தால், ஒரு வித எரிச்சல் அல்லது சலிப்பு தட்டிவிடவும் கூடும். ஆனா அது பாடலைப் பொறுத்தது எனினும், ஒரு நல்ல பாடலையும் மீண்டும் மீண்டும் கேட்கும்பொழுது இதே நிலைக்கு தள்ளிவிடும். சில சமயம் நமக்கு பிடித்த பாடலையே மீண்டும் மீண்டும் கேட்க, நமக்கே பிடிக்காமல் போய்விடும்.


ஆனால் சிலர் பாடல் புதிதோ, பழையதோ அந்த பாடலைக் கேட்கும்போது, தங்களை அறியாமல் கை, கால்களை ஆட்டுவதும், அந்த பாட்டுடன் சேர்ந்து பாடுவதுமாக இருப்பர். ஆனால் உண்மையில் பாடல் கேட்பதில் கூட்டனுபவம் தனி, ஹெட்போன் அல்லது தனிமையில் அமர்ந்து பாடல் கேட்பது என்பது தனி அனுபவம்.  ட்விட்டரில் வைரல் ஆகும் ஒரு வீடியோவில் ஒரு வயதானவர் ஒரு காரில் அமர்ந்து பாடலை கேட்கிறார்.


தன் காருக்குள் அமர்ந்தபடி, இளமை துடிப்போடு வேகவேகமாக தலையை ஆட்டி, முழு உற்சாகத்துடன் பெரியவர் ஒருவர் பாடல் கேட்டு தலை ஆட்டுவதை இன்னொரு காரில் இருந்த நபர் படம் பிடித்திருக்கிறார்.  அந்த அளவிற்கு அவரை பரவசப்படுத்திய இசையமைப்பாளர் யார் ?  இந்நிலையில் இந்த வீடியோவை பதிவிட்டவர் , அந்த பெரியவர் கேட்கும் பாடல் என்ன பாடலாக இருக்கும் என்று பதிவிட்டபடி, தான் எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ளதை அடுத்து வீடியோ வைரல் ஆகி வருகிறது.

 

VIRAL, TRENDS, VIDEO, MUSIC