ஆன்லைன் மார்க்கெட்டில், ’காதலி விற்பனைக்கு’ : போட்டோவை போட்டு,பழிவாங்கிய காதலன்!
Home > தமிழ் news
இங்கிலாந்தை சேர்ந்த டாலி லீக்ஸ், கெல்லி எனும் தன் காதலியுடன் உண்டான ஊடலால், அவரை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு, அறமற்று செய்த காரியம்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. காதலியுடனான சண்டைக்கு பிறகு இவர் கெல்லியின் புகைப்படத்தை இணையத்தின் மூலம், வணிகம் செய்து பொருட்களை விற்கக் கூடிய இ-பே எனும் பிரபல சைட்டுக்கு சென்று அதில் ‘Girlfriend for sale’ என்று தகவல் போட்டிருக்கிறார். மேலும் அதில் தன் காதலியை பற்றிய மோசமான விமர்சனத்தையும் முன்வைத்திருக்கிறார்.
எனினும் மனிதர்களை அல்லது மனித உறுப்புகளை விற்பதற்கான இடம் இது இல்லை என்று சொல்லி, சம்மந்தப்பட்ட நிறுவனம் டாலி லீக்ஸின் பதிவை நீக்கியும் விட்டு, வார்னிங்கும் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது 6 செகண்ட் மீடியாவாச்சே? அதற்குள் அத்தனை பேர் பார்த்துவிட்டனர். சிலர் திட்டி தீர்க்க, சிலர் நான் வாங்கிக்கொள்கிறேன் என்று பதிலும் சொல்லியிருக்கின்றனர்.
ஒரு ஊடலால் காதலியை விலைபொருளாக்கி மற்ற ஆடவர்களின் முன் சந்தைப்படுத்த நினைக்கும் தவறான எண்ணம் இருப்பவர் எப்படி உண்மையாக காதலித்திருக்க முடியும் என்பன போன்ற விமர்சனமும் டாலி லீக்ஸ் மீது விழ, விஷயம் பெரும் விவாத பொருளாகவும் மாறிவருகிறது.