'குடிச்ச 2 பாட்டில் தண்ணிக்கு'.. ரூ.7 லட்சத்தை 'டிப்ஸாக' அள்ளிக்கொடுத்த நபர்!
Home > தமிழ் newsஹோட்டல் ஒன்றில் தான் ஆர்டர் செய்த 2 தண்ணீர் பாட்டில்களுக்கு, ரூபாய் 7 லட்சத்தை டிப்ஸாக இளைஞர் ஒருவர் கொடுத்திருக்கிறார்.
யூடியூப் சேனலொன்றை நடத்தி வரும் மிஸ்டர் பீஸ்ட் என்னும் இளைஞர் சமீபத்தில் அமெரிக்காவின் நார்த் கரோலின் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு அலைனா கஸ்டர் என்னும் பணிப்பெண் அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்க, அவரிடம் 2 பாட்டில் தண்ணீர் கேட்டுள்ளார்.
தண்ணீர் பாட்டில் வந்தவுடன் அதைக்குடித்து விட்டு சுமார் $10,000 டாலர்களை டிப்ஸாக, மிஸ்டர் பீஸ்ட் வைத்து விட்டு சென்றிருக்கிறார். இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை அவர் டிப்ஸாக கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இவ்வளவு டிப்ஸையும் தனக்கே வைத்துக் கொள்ளாமல், அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் பிரித்துக் கொடுக்கப் போவதாக அலைனா தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து மிஸ்டர் பீஸ்ட் கூறுகையில்,'' ஒருவருக்கு பணம் கொடுக்கும் போது அவர் எவ்வளவு சந்தோஷப்படுகிறார்,'' என்பதைக் காணவே இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார். பீஸ்ட்டின் யூடியூப் சேனலை சுமார் 90 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.