''இப்படி எல்லாமா பட்டாசு வெடிப்பாங்க''...வைரலாகும் வீடியோ!

Home > தமிழ் news
By |
''இப்படி எல்லாமா பட்டாசு வெடிப்பாங்க''...வைரலாகும் வீடியோ!

தீபாவளி பண்டிகையானது நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.பண்டிகையின் போது ஆபத்தான முறையில் பட்டாசு வெடித்த வாலிபர் ஒருவரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் சில கட்டப்பாடுகள் விதித்தது.இதன்படி பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அறிவுறுத்தியிருந்தது.

 

அவ்வாறு பட்டாசு வெடித்து பலரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய நிலையில்,வாலிபர் ஒருவர் உற்சாக மிகுதியில் கையில் பட்டாசு பெட்டியை வைத்துஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடித்த காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது.அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் வானில் சென்று வெடிக்கும் வகையில் உள்ள பட்டாசுகளை வெடிக்க வைத்து கொண்டிருந்தார்.

 

அப்போது திடீரென அந்த பெட்டியை தலைக்கு மேலே பின் பக்கமாக திருப்பி விடுகிறார்.உடனே அந்த பட்டாசுகள் பின்னோக்கி செல்கிறது.அந்த வாலிபரின் பின்பக்கமாக இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடுகிறார்கள். வாலிபரின் செயலை கவனித்த அருகிலிருத்தவர்கள் உடனே சென்று அந்த பட்டாசு பெட்டியை வாங்கி விடுகிறார்கள்.வாலிபரின் இந்த ஆபத்தான செயலை பலரும் கண்டித்திருக்கிறார்கள்.அதன் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

DIWALI CRACKERS