திடீரென வெடித்து சிதறிய சிகரெட்.. இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!
Home > தமிழ் newsஇ-சிகரெட் வெடித்துச் சிதறியதால், இளைஞர் ஒருவருக்கு நிகழ்ந்த பரிதாபமான நிலை பலரிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸஸ் நகரைச் சேர்ந்த 24 வயதான பிரவுன் ஒரு எலக்ட்ரிக் சிகரெட்டைப் புகைத்துள்ளார். ஆனால் அந்த எலக்ட்ரிக் சிகரெட்டினால் இப்படி ஒரு ஆபத்து வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். காரணம் அந்த சிகரெட் வெடித்துச் சிதறியுள்ளதுதான். அமெரிக்காவின் போர்ட்வொர்த் நகரில் இருக்கும் ஒரு எலக்ட்ரானிக் சிகரெட் கடையில் எலக்ட்ரானிக் சிகரெட்டை வாங்கியுள்ளார் பிரவுன்.
பின்னர் அதனை, கடைக்கு வெளியே இருந்த தனது காருக்குள் அமர்ந்தபடி புகைத்துள்ளார். ஆனால் அவர் சற்றும் எதிர்பாராத விதத்தில் திடீரென சிகரெட் வெடித்துச் சிதறியதால் அவர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினார். சிகரெட்டில் புகையிலை இருப்பதாலும், அது சுற்றுச் சூழலுக்கு கேடு என்பதாலும் அதற்கு மாற்றாக பார்க்கப்படும் இ-சிகரெட்டிலும் இப்படி புதுவகையான பிரச்சனை கிளம்பி வருவதால் பலரும் பீதியில் இருக்கின்றனர்.
பின்னர் அவர் தனது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு பக்கவாதம் உண்டானதால் உயிரிழந்துள்ளார். அதன் பிறகு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பிடித்த எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்ததே அவர் உயிரிழந்ததற்கான காரணம் என்பதை கண்டறிந்துள்ளனர். முன்னதாக அமெரிக்காவின் புளோரிடா நகரைச் சேர்ந்த 38 வயதான இளைஞருக்கும் இதே போல் ஒரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.