நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் போட்டி என்பதால், ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியின் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
இந்நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வைத்து விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து சென்ற போலீசார், திருவல்லிக்கேணி ஸ்டேட் பேங்க் ஏடிஎம் அருகே இருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் ஐபிஎல் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் கொளத்தூரைச் சேர்ந்த அம்ஜத் என்பதும், டிக்கெட்டை இரண்டு மடங்கு விலைக்கு விற்றதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து 30 டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
OTHER NEWS SHOTS