பிரபல மலையாள நடிகை மேகா மேத்யூ தனது சகோதரரின் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொள்ள, கொச்சியில் இருந்து கார் மூலம் எர்ணாகுளம் சென்றுள்ளார்.

 

எர்ணாகுளம் அருகே சென்றபோது எதிரில் வந்த கார் இவரின் கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மேகாவின் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காருக்குள் இருந்த மேகா மயங்கி விட்டார்.

 

ஆனால் அருகில் இருந்த மக்கள் அவர் இறந்து விட்டதாகக் கருதி தங்கள் மொபைல்களில் படம்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.தொடர்ந்து 1 மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்குப் போராடிய மேகாவை, அந்த வழியாக வந்த புகைப்படக்கலைஞர் ஒருவர் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

 

அங்கு மேகாவுக்கு பலத்த அடிகள் எதுவும் இல்லை என்று கூறிய மருத்துவர்கள் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

BY MANJULA | JUN 12, 2018 10:34 PM #ACCIDENT #MEGHAMATHEW #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS