‘எங்கள மன்னிச்சிருங்க.. பொண்ணுங்கள பத்தி இப்படி எழுதியிருக்க கூடாது’.. பிரபல பத்திரிகை!

Home > தமிழ் news
By |

ஜப்பானின் பிரபலமான பத்திரிகை நிறுவனம் ஒன்று பெண்களைப் பற்றி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கட்டுரைக்காக பகிரங்கமாக பெண்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

‘எங்கள மன்னிச்சிருங்க.. பொண்ணுங்கள பத்தி இப்படி எழுதியிருக்க கூடாது’.. பிரபல பத்திரிகை!

கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி இந்த பத்திரிக்கையில் பெண்கள் சார்ந்த முரண்பாடான கருத்துக்களை சர்ச்சைக்குரிய வகையில் வெளியிட்டதை அடுத்து, இந்த கட்டுரைக்கும் கட்டுரையின் மூலம் வெளியான கருத்துக்களுக்கும் பெரும் எதிர்ப்புகள் எழுந்தன. அதுமட்டுமல்லாமல் change.org மூலம் பெண்களை காட்சிப்பொருளாக பார்ப்பது மற்றும் இழிவாக நடத்தப்படுவது உள்ளிட்டவற்றின் மீதான புகார்களை 28 ஆயிரம் பேரின் ஒத்துழைப்பு வாக்குமூலத்துடன் பெண் ஒருவர் பதிவு செய்துள்ளார்.

பெண்களுக்கு பாலியல் உறவுகள், மது மற்றும் போதை பொருட்கள் மிக சுலபமாக கிடைக்கப்பெறும் வகையில் சுதந்திரமாக இருக்கவிடும் பல்கலைக்கழகங்களின் தரவரிசை என்கிற தலைப்பில் வெளியான இந்த கட்டுரையில் நவீன ஆண்ராய்டு அப்ளிகேஷன்கள் மூலம் ஆணும் பெண்ணும் கலாச்சாரம் இன்றி உறவுகொள்கிறார்கள் என்கிற கருத்தோடு இந்த அப்ளிகேஷனை வடிவமைத்தவரின் பேட்டியும் சேர்ந்துவந்துள்ளது. 

சும்மாவே ஜப்பானில் மீ டூ பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து ஆடும் நிலையில் இப்படியான கருத்துக்கள் அடங்கிய கட்டுரை வெளியானதால், கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து,  தங்கள் வாசகர்களை பாதிக்கும் நோக்கிலும், பல்கலைக்கழகங்களின் பெயர்களை நேரடியாக அம்பலப்படுத்தியும் கட்டுரை வெளியிட்டதால் பொது மன்னிப்பு கோரியுள்ளது இந்த பத்திரிகை நிறுவனம்.

COLLEGESTUDENTS, MAGAZINE, WOMEN, UNIVERSITIES, COTROVERSY, ARTICLE, CONTENT, STORY, PUBLISHING, JAPAN, JOURNALISM, GIRLS