வார்டுக்கு ஒரு எஸ்.ஐ..போன் செய்தால் வீடு தேடி வரும் போலீஸ் !

Home > தமிழ் news
By |
வார்டுக்கு ஒரு எஸ்.ஐ..போன் செய்தால் வீடு தேடி வரும் போலீஸ் !

சென்னை,கோயம்புத்தூருக்கு அடுத்தப்படியாக பெரிய நகரமாக கருதப்படுவது மதுரையாகும்.அதிக நெருக்கமான மக்கள் தொகை உள்ள நகரங்களில் மதுரையும் ஒன்று.தூங்க நகரமான மதுரையில் குற்ற சம்பவங்களும் சற்று அதிகம்.இதனால் காவல்துறை பல வழிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

 

பெரிய நகரமான மதுரையில்  17 காவல் நிலையங்கள் மட்டுமே இருக்கிறது.இதனால் பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுகிறார்கள். இதனால், மாநகருக்குள் குற்றச்செயல்கள் அதிகரித்துவருகின்றன. 

 

வரும் காலத்தில் குற்றங்களைக் குறைக்கவும், பெண்கள், குழந்தைகள்  பாதுகாப்பாக இருக்கவும், பொது மக்கள்  காவல் துறையை எளிதாக தொடர்புகொள்ள வசதியாக, மதுரை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளில்,  வார்டுக்கு ஒருவர் என்ற கணக்கில் எஸ்.ஐ-களை நியமித்து புதிய நடைமுறையை உருவாக்கியுள்ளார், கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம்.

 

வார்டுக்கு ஒரு எஸ்.ஐ என்ற வீதத்தில்  மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளுக்கும் எஸ்.ஐ-களை வார்டு ஆபீசராக நியமித்ததோடு, அவர்களின் மொபைல் எண்களைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வெளியிட்டுள்ளார்.பொதுமக்கள் ஏதாவது பிரச்னை என்றால் காவல் நிலையத்தில் காத்து இருக்காமல்  வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வார்டு ஆபீசர்களான எஸ்.ஐ-க்கு போன் செய்தால் போதும். அவர்கள் ஸ்பாட்டுக்கு வருவார்கள். ஒவ்வொரு எஸ்.ஐ-யுடனும் இரண்டு காவலர்கள் இருப்பார்கள்.

 

இந்த திட்டத்திற்கு மக்களின்  ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப இத்திட்டம் மேம்படுத்தப்படும் எனவும் காவல் ஆணையர் தெரிவித்தார்.