Looks like you've blocked notifications!

சர்ச்சைக்குள்ளான காஞ்சிபுரம் பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தின் மீது எழுந்த புகாரையடுத்து,  அங்கு தங்கியிருந்த 294 முதியவர்களை வருவாய் துறை அதிகாரிகள் அழைத்துச் சென்று, வேறு இல்லத்தில் தங்க வைத்துள்ளனர்.

 

இந்நிலையில், அந்த கருணை இல்ல நிர்வாகி தாமஸ், முதியோர்கள் சட்ட விரோதமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இதனை இன்று விசாரித்த நீதிபதிகள், கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியோர்களை, அந்த இல்லத்திற்கே இன்று திருப்பி அனுப்பி விட வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

BY SATHEESH | MAR 27, 2018 5:42 PM #STJOSEPHHOSPICE #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS