கடந்தாண்டு வெளியான 'விக்ரம்-வேதா' படத்தில் மாதவன்-ஸ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அப்படத்தில் கணவன்-மனைவியாக நடித்த இருவரின் 'கெமிஸ்ட்ரி'யும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

 

இந்த நிலையில்,மீண்டும் இந்த ரொமாண்டிக் ஜோடி இணைந்து நடிக்கவுள்ளனர். அறிமுக இயக்குநர் திலீப் இயக்கும் இப்படத்துக்கு 'மாறா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

இதுகுறித்து நடிகை ஸ்ரத்தாவிடம் நாம் கேட்டபோது, "எனது புதிய படத்தில் நடிக்க மிகவும் ஆவலாக உள்ளேன். வருகின்ற ஜூன் 18-ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. மாதவனுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி,'' என்றார்.

BY MANJULA | JUN 14, 2018 4:38 PM #VIJAYSETHUPATHI #MADHAVAN #VIKRAMVEDHA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS