'தடைகளை உடைத்து'...அமெரிக்க அதிபரின் பாதுகாப்புப் பணியில் கலக்கும் இந்திய வம்சாவளி இளைஞர்!

Home > தமிழ் news
By |
'தடைகளை உடைத்து'...அமெரிக்க அதிபரின் பாதுகாப்புப் பணியில் கலக்கும் இந்திய வம்சாவளி இளைஞர்!

அமெரிக்க அதிபர்கள்தான் உலகிலேயே உச்சகட்ட பாதுகாப்பில் இருப்பவர்கள்.இவர்களின் பாதுகாப்பை மேற்கொள்வது US Secret Service.அமெரிக்க அதிபர்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும்,அதன் பாதுகாப்பு அதிகாரிகள் முன்பே அந்நாட்டிற்கு சென்று பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.

 

பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பினை உறுதி செய்த பின்னரே அதிபர்கள் அந்நாட்டிற்கு செல்வார்கள்.அதிபர்  உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் முதற்கொண்டு அனைத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்வது இந்த அதிகாரிகள் தான்.உள்நாட்டில் அதிபர்கள் எங்கு சென்றாலும் இவர்கள் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே அதிபரால் எங்கும் செல்ல முடியும்.

 

US Secret Service-ல் இணைவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.இதற்கு பல கட்ட பயிற்சிகள் இருக்கிறது.அதன் பயிற்சிகள் மிகக்கடுமையாக இருக்கும்.அத்தனை பயிற்சிகளை முடித்த பின்னும் பல கட்ட சோதனைகளுக்கு பின்புதான் அதிபரின் பாதுகாப்பில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

 

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த அஷ்தீப்சிங் பாட்டியா என்னும் சீக்கியர் அதிபரின் பாதுகாப்பு பிரிவில் இணைந்து அந்த பெருமையை பெற்று இருக்கிறார்.இதற்காக பல கடுமையான கொரில்லா பயிற்சிகள் கொடுக்கப்பட்டு இறுதியில் பாதுகாப்பு பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறார்.

 

இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதையடுத்து 1984 -ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் அஷ்தீப்சிங் பாட்டியாவின் குடும்பமும் பாதிப்புக்குள்ளானது. கலவரத்தில் அஷ்தீப்சிங்கின் மாமா இறந்தார். தந்தையும் படுகாயமடைந்தார். இதனால், கான்பூரில் வசித்து வந்த அஷ்பீந்தர்சிங்கின் குடும்பம் லூதியானாவுக்கு இடம் பெயர்ந்தது. தொடர்ந்து கடந்த 2000-ம் ஆண்டு அஷ்தீப்சிங் பாட்டியாவின் குடும்பம் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தது. அப்போது அஷ்தீப் சிங்கின் வயது 10.

 

சிறுவது முதல் US Secret Serviceயில் இணைய வேண்டும் என்பது அவரது கனவு.அதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்ட பாட்டியா இறுதியில் அதனை சாதித்தும் காட்டி இருக்கிறார்.ஆனால் பாதுகாப்புப் பணியில் இருக்கும் போது டர்பன் கட்டக் கூடாது, தாடி வைக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது.

 

இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்று பாதுகாப்பு பணியில் இணைக்கப்படும் நிகழ்ச்சியில்,டர்பனோடு கலந்து கொண்டார்.தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட வீரநடை போட்டு கிளம்பிவிட்டார்  அஷ்தீப்சிங் பாட்டியா.

US SECRET SERVICE, DONALD TRUMP, ANSHDEEP SINGH BHATIA