பயணிகளின் புத்தகத்தால் கண்டுபிடிக்கப்பட்ட 'கறுப்பு பெட்டி'.. விபத்துக்கான மர்மங்கள் வெளியாகுமா?
Home > தமிழ் newsஉயிரிழந்த பயணிகளின் புத்தகங்கள் மற்றும் உடமைகளைக் கொண்டு, லயன் ஏர் விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 29-ம் தேதி காலை இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து பங்கல் பினாங் தீவு நோக்கிக் கிளம்பிய லயன் ஏர் பயணிகள் விமானம் புறப்பட்ட 13 நிமிடங்களில் மாயமானது.பின்னர் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் விமானம் கடலில் விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த 189 பேரும் உயிரிழந்தனர்.
உலக மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய இந்த விமான விபத்துக்கான காரணம் என்னவென்பது தெரியவில்லை. இதற்காக விமானத்தின் கறுப்பு பெட்டியைத் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் இன்று காலை இந்தோனேசிய உள்நீச்சல் வீரர்கள் கறுப்பு பெட்டியைக் கண்டறிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 5 மணியில் இருந்து நடைபெற்ற தேடலில் 7 மற்றும் 10 கிலோ எடை கொண்ட 2 பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சுமார் 5 மணி நேர தேடுதலுக்குப் பின் இந்த பெட்டிகள் கண்டறியப்பட்டடுள்ளன. பயணிகளின் புத்தகங்கள், உயிர்காக்கும் உடைமைகள் மற்றும் பொருட்கள் ஆகியவைகளை வைத்து நாம் சரியான இடத்தில் தான் தேடுகிறோம் என வீரர்கள் தொடர்ந்து தேடி தொடர்ந்து இந்த பெட்டியைக் கண்டு பிடித்ததாக இதுகுறித்து உள்நீச்சல் வீரர்கள் பேட்டியளித்துள்ளனர்.
கப்பல் அதிகாரிகளிடம் தற்போது இந்த கறுப்பு பெட்டிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக ஆய்வு செய்தபின்னரே, விபத்துக்கான காரணம் என்னவென்பது அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.