'திருமணம் செய்தால் ரூ.25 லட்சம் கடன், 3 குழந்தைகள் பெற்றால் கடன் ரத்து'..அதிரடி ஆஃபர் அளித்த அரசு!

Home > News Shots > தமிழ் news
By |

நான்கு குழந்தைகளுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு வாழ்நாள் முழுக்க வருமான வரியிலிருந்து  விலக்கு அளிக்கப்படும் என ஹங்கேரி நாட்டு அரசு அறிவித்துள்ளது.

'திருமணம் செய்தால் ரூ.25 லட்சம் கடன், 3 குழந்தைகள் பெற்றால் கடன் ரத்து'..அதிரடி ஆஃபர் அளித்த அரசு!

1980 -களின் ஆரம்பத்திலிருந்தே அந்நாட்டு மக்கள் தொகை சரிவை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 28,000 என்ற ரீதியில் ஹங்கேரி நாட்டின் மக்கள் தொகை குறைந்து கொண்டே  வருகிறது. இதனால் ஹங்கேரி நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சில திட்டங்களை அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் அறிவித்துள்ளார்.

அதில், நான்கு மற்றும் அதற்கு மேல் குழந்தை வைத்திருந்தால் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும், மூன்று அல்லது அதற்கு மேல் குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு 7 இருக்கைகள் கொண்ட வாகனம் வாங்குவதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.6,28,000 மானியமாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

மேலும் 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் செய்யும் முதல் திருமணத்துக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.25 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் எனவும், அவர்கள் 3 குழந்தைகள் பெற்ற பின்னர் கடன் ரத்து செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இதுபோன்ற பல திட்டங்களை அறிவித்த ஹங்கேரி நாட்டு பிரதமர், ஹங்கேரி நாட்டின் மக்கள் தொகையை அதிகரிப்பதே இதன்நோக்கம்  என தெரிவித்துள்ளார்.

HUNGARY, INCOMETAX, WOMEN, CHILDREN