போலீஸ் உடையுடன் பிச்சை எடுக்க எனக்கு அனுமதி கொடுங்கள் என, மும்பை போலீஸ் ஒருவர் அம்மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது போலீஸ் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மும்பையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் த்யானேஸ்வர் அஹிரோ சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இல்லத்தில் பாதுகாப்பு பாணியில் ஈடுபட்டுள்ளார். 2 மாதங்களாக தனக்கு சம்பளம் வழங்கப்படாததால் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆளுநர் வித்யாசாஹர் ராவ் மற்றும்போலீஸ் கமிஷனர் தத்தா பட்சல்கிகார் ஆகியோருக்கு த்யானேஸ்வர் கடிதம் எழுதியுள்ளார்.

 

த்யானேஸ்வர் தனது கடிதத்தில், " கடந்த மார்ச் மாதம் எனது மனைவிக்கு காலில் அடிபட்டதால் 2 நாட்கள் அவசர விடுப்பு எடுத்தேன். எனது விடுப்பினை அதிகாரிகளுக்கு போன் பண்ணி சொன்னேன். அதேபோல 2 நாட்களுக்குப்பின் வேலையிலும் சேர்ந்து விட்டேன். ஆனால் கடந்த 2 மாதங்களாக எனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

 

வங்கியில் வாங்கிய கடனுக்கு மாதாமாதம் பணம் கட்டிவருகிறேன். எனது வயது முதிர்ந்த பெற்றோர் மற்றும் மனைவி, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். தற்போது 2 மாதங்களாக சம்பளம் வராததால் குடும்பத்தை நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சீருடையுடன் என்னைப் பிச்சையெடுக்க அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்,'' என தெரிவித்துள்ளார்.

BY MANJULA | MAY 10, 2018 1:20 PM #MUMBAI #POLICE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS