சிறுமி பாலியல் வழக்கில் கைதான 17 பேருக்கு ஆதரவாக எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராக மாட்டார்கள் என, வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

சென்னை அயனாவரத்தை சேர்ந்த காது கேளாத 11 வயது சிறுமியை சுமார் 17 பேர் 7 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியின் குடியிருப்பை சேர்ந்த 17 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 17 பேரையும் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட  17 பேரையும் வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பைத் தொடர்ந்து `17 பேரும் புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.


இந்தநிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன்
தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்.கைதான 17 பேருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாராவது ஆஜரானால் அவர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்,'' என தெரிவித்துள்ளார்.

 

வழக்கறிஞர் சங்கத்தின் இந்த முடிவு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

BY MANJULA | JUL 17, 2018 5:29 PM #SEXUALABUSE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS