நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணியை ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு பஞ்சாப் அணியை ராஜஸ்தான் பழிதீர்த்துக் கொண்டுள்ளது.

 

இந்த நிலையில் தோல்விக்குப் பின் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கூறுகையில், "160 ரன்கள் என்பது எடுக்க கூடிய இலக்குதான். தொடக்கத்திலேயே எங்களது விக்கெட்டுகள் சரிந்துவிட்டதால், தோல்வி ஏற்பட்டது. ஒரு பரிசோதனைக்காகவே நான் 3-வது வீரராக களம் இறங்கினேன்.

 

இந்த தோல்வியால் நாங்கள் அதிகமாக கவலைப்படவில்லை. ஏனென்றால் 10 போட்டியில் விளையாடி 6-ல் நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம்,'' என்று தெரிவித்துள்ளார்.

 

அதே நேரம் இந்த வெற்றி குறித்து ராஜஸ்தான் கேப்டன் ரஹானே கூறுகையில், "எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு ரன்களைக் கட்டுப்படுத்தினர். குறிப்பாக சோதியும், கவுதமும் நன்றாக செயல்பட்டனர்,'' என தங்களது அணியின் பந்துவீச்சாளர்களை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS