‘உலகக் கோப்பையில் பௌலிங் இனி இவர் தலைமையில் தான்’..சுழற்பந்து வீச்சாளருக்கு கிடைத்த வாய்ப்பு!

Home > தமிழ் news
By |

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான குல்திப் யாதவை பௌலிங்கிற்கு தலைமை ஏற்க வைக்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி திட்டமிட்டுள்ளது.

‘உலகக் கோப்பையில் பௌலிங் இனி இவர் தலைமையில் தான்’..சுழற்பந்து வீச்சாளருக்கு கிடைத்த வாய்ப்பு!

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2015 -ஆம் ஆண்டு நடைபெற்ற உலக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றது. அதற்கு முன்னர் தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2011 -ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிக்கு இடம்பெறும் இந்திய அணியின் வீரர்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பைக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்திய அணி சமீபத்தில் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்று விளையாடியது. இதனால் இங்கிலாந்து மைதானங்கள் இந்திய வீரர்களுக்கு நன்கு பழக்கப்பட்டதாக இருக்கும். இதில் குல்திப் யாதவின் பந்துவீச்சு இந்திய அணியின் பெரும் பலமாகக் கருதப்படுகிறது. இதனால் உலகக் கோப்பையில் குல்திப் யாதவிற்கு பௌலிங்கில் முழு சுதந்திரம் கொடுத்து, பௌலிங்கிற்கு அவரை தலைமை ஏற்க வைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

TEAMINDIA, ICC, BCCI, WORLDCUP2019, KULDEEPYADAV