புகைப்பட உதவி Twitter/IPL

 

நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 4.5 ஓவரில் 62 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். இதனால் 200 ரன்னை சர்வ சாதாரணமாக தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 19 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் 142 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

 

ராஜஸ்தானின் அணியின் இந்த மாபெரும் தோல்விக்கு கொல்கத்தா பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்வே காரணம். 4 ஓவர்கள் வீசிய குல்தீப் வெறும் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் தான் சிறப்பாக பந்துவீசியதற்கு, ராஜஸ்தான் ஆலோசகர் ஷேன் வார்னே தான் காரணம் என குல்தீப் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் எப்போதுமே ஷேன் வார்னேயின் மிகப்பெரிய ரசிகன். அவர்தான் என்னுடைய முன்னுதாரணம். அவர் முன் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்த விரும்புவேன்.போட்டிக்குப்பின் அவருடன் பேசிக்  கொண்டிருந்தேன். இது அவருடன் சிறிய உரையாடல்தான். ஐபிஎல் தொடருக்குப் பின் ஒருவேளை அவருடன் பேசுவதற்கான வாய்ப்பை பெறலாம்,'' என தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS