இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தவறான முடிவுகளை எடுக்க வைத்து, தங்களை ஏமாற்றி விட்டதாக இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் புலம்பித் தள்ளியிருக்கிறார்.

 

குல்தீப்பின் பந்துவீச்சு குறித்து மோர்கன் கூறுகையில், "குல்தீப் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி எங்களை தவறான முடிவுகளை எடுக்க வைத்து ஏமாற்றிவிட்டார். பந்தைத் தூக்கி அடித்து ஆட்டமிழந்ததைக் கூறவில்லை, குல்தீப் எங்களை முற்றிலும் ஏமாற்றிவிட்டார்,அதாவது அவர் மிகச்சிறப்பாக வீசினார்.

 

ஒரு பவுலர் இருபுறமும் ஸ்பின் செய்கிறார், அதனை திறம்பட மறைக்கிறார் என்பது எதிர்கொள்ளக் கடினமான ஒரு விஷயம். ஏனெனில் அதுமாதிரி வீசுவதற்கு இங்கு ஆளில்லை. அதனால்தான் குல்தீப்புக்கு எதிராக திட்டமிடல் அவசியம் என்று சொல்கிறேன்.இந்திய அணி வலுவான அணி,உண்மையில் வலுவான அணி,'' என்று தெரிவித்திருக்கிறார்.

 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து, 5 விக்கெட்டுகளை குல்தீப் வீழ்த்தினார். குறிப்பாக ஒரே ஓவரில் 3 வீரர்களை அவர் ஆட்டமிழக்கச் செய்தது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS