சாக்லேட் வாங்க சென்ற சிறுவனை பலிகொண்ட குண்டுவெடிப்பு:கொல்கத்தாவில் பயங்கரம்!
Home > தமிழ் newsமேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது. இந்த துயரசம்பவத்தில் 7 வயது சிறுவனும் அவனின் தாயார் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தான். தனது தாயாருடன் சாக்லேட் வாங்குவதற்காக கடைக்கு சென்ற போது இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.
கொல்கத்தாவின் வடக்கு புறநகர்ப் பகுதியான நாகேர்பாஜாரின்,பஜாரிலிருந்த 4 மாடி கட்டடத்துக்கு முன்னர் இந்த வெடி விபத்து நடந்துள்ளது. வெடி வெடித்தவுடன், கண்ணாடி மற்றும் உலோக துகல்கள் சிதறியதாக கூறப்படுகிறது. அது தான் மக்கள் காயமடைய காரணமாக இருந்துள்ளது.
காலை 9 மணி அளவில் இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்தில விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அம்மோனியம் நைட்ரேட்டானது பாம் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. மேலும், தடவியல் நிபுணர்களும் உளவு துறை போலீஸாரும் அந்த இடத்தைப் பரிசோதித்து வருகின்றனர்.
குண்டுவெடிக்கும் போது கேஸ் சிலிண்டர்தான் வெடித்துவிட்டதாக நினைத்தோம். ஆனால், அதன்பின் குண்டுவெடிப்பில் சிதறிய இரும்புத்தகடுகளைக் கண்டெடுத்தபோதுதான் இது குண்டு வெடிப்பு என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது என சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸின் தலைவர்களில் ஒருவரான பஞ்சு ராய்``இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல.பலநாட்கள் திட்ட மிட்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு. அவர்கள் என்னையும் பிற திரிணாமுல் காங்கிரஸின் தொண்டர்களையும் கொல்லத் திட்டமிட்டுள்ளனர், அல்லது பீதியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்துள்ளனர்" என்றார்.
கொல்கத்தா குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.