'கடைசி ஓவரில் பும்ரா ஆவேசம்'.. ஒரே வார்த்தையில் 'கூல்' ஆக்கிய தளபதி!

Home > தமிழ் news
By |
'கடைசி ஓவரில் பும்ரா ஆவேசம்'.. ஒரே வார்த்தையில் 'கூல்' ஆக்கிய தளபதி!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியில்,இளவரசனே புஜாராதான் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

 

அடேலைட் மைதானத்தில்  இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியானது நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் இந்திய அணி 250 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் புஜாரா 123 (146) ரன்கள் குவித்தார். பின்னர் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி,இந்திய வீரர்களின் சுழற்பந்து வீச்சிற்கு தாக்கு பிடிக்க முடியாமல்,அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து,235 ரன்களில் சுருண்டது. இந்திய அணியில் பும்ரா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் இந்திய அணி 307 எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் புஜாரா 71 ரன்கள் மற்றும் ரஹானே 70 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியின் லையான் அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளை சாய்த்தார். இதைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 291 ரன்களில் ஆல் அவுட் ஆகி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி அபாரமான வெற்றியை பெற்றது.

 

போட்டிக்கு பின்பு பேசிய விராட் கோலி "இறுதி ஓவரை வீசும்போது பும்ரா ஆவேசப்பட்டார். ஆனால் நான் அவரிடம் அவசரப்படாதே,நிதானமாக இரு என்று மட்டும் கூறினேன். 2 இன்னிங்கிஸிலும் சேர்த்து 20 விக்கெட்டுகளை 4 பந்துவீச்சாளர்கள் மட்டுமே கைப்பற்றியுள்ளனர். அவர்களை நினைத்து உண்மையிலேயே பெரிய பெருமை கொள்ள வேண்டும். இந்த ஆட்டத்தின் இளவரசனே புஜாராதான். முதல் இன்னிங்ஸில் அணியே சரிந்தபோது, அதை தடுத்து தூக்கியது அவர்தான் என புகழாரம் சூட்டினார்.

VIRATKOHLI, CRICKET, BCCI, ADELAIDE, BUMRAH