எங்களுக்கு எதிராக 'கோலியால்' விரைவாக ரன்கள் குவிக்க முடியவில்லை: இங்கிலாந்து கேப்டன்

Home > தமிழ் news
By |
எங்களுக்கு எதிராக 'கோலியால்' விரைவாக ரன்கள் குவிக்க முடியவில்லை: இங்கிலாந்து கேப்டன்

ட்ரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, முதல் வெற்றியை ருசித்துள்ளது.

 

இந்தநிலையில் தோல்விக்குப் பின் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அளித்த பேட்டியில், கோலிக்கு நன்றாகவே பந்துகள் வீசுகிறோம் என தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் ஜோ ரூட் கூறும்போது, ''இந்திய அணியை விரைவில் வீழ்த்தியிருக்க வேண்டும்.இந்திய வீரர்கள் நன்றாக பேட் செய்தனர். 2-வது இன்னிங்ஸில் ஸ்டோக்ஸ்-பட்லர் கூட்டணி எங்களுக்கு நல்ல பாடம். ஏனெனில் ரன்களை எப்படி எடுக்கப் போகிறோம் என்பதில் அவர்களுக்கு தெளிவு இருந்தது.

 

கேட்சுகளை விடாமல் பிடிக்க வேண்டும். இதுவரை அது எங்களுக்குக் கைகொடுக்கவில்லை. ஒருவேளை அது கைகொடுக்கத் தொடங்கிவிட்டால், அது மிகப்பெரிய அளவில் பலன்களை அளிக்கும்.

 

விராட் கோலிக்கு நன்றாகவே பந்து வீசுகிறோம். அவரால் எங்களுக்கு எதிராக விரைவாக ரன்கள் எடுக்க முடியவில்லை. ஆனால் அவர் ரன்கள் எடுக்கும் வழியைக் கண்டுபிடித்துக் கொள்கிறார்,'' என்றார்.