அப்படிப்போடு! பிரபல பேட்ஸ்மேனின் ‘16 வருஷ சாதனையை அசால்ட்டாக’ முறியடித்த கோலி!
Home > தமிழ் newsஇந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் மேட்சில் ராகுல் ட்ராவிட்டின் 16 வருட சாதனையை முறியடித்து விராட் கோலி சாதனை புரிந்துள்ள சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதன் மூலம் வெளிநாடுகளில் நடந்த டெஸ்ட் மேட்ச்களில் ஆடி அதிக ரன்கள் எடுத்த இந்திய கிரிக்கெட் வீரர் என்கிற புகழை அடைகிறார் கோலி. இதற்கு முன்பாக, வெளிநாட்டு தொடர் ஆட்டத்தில் 2002-ஆம் ஆண்டு 1137 ரன்கள் எடுத்து டிராவிட்டும், 1983-இல் 1065 ரன்களை எடுத்து மொஹிந்தர் அமர்நாத்தும், 1971-இல் 918 ரன்கள் எடுத்து கவாஸ்கரும் சாதனை புரிந்திருந்தனர்.
முன்னதாக பெர்த் டெஸ்ட்டில் அடித்த சதம் உட்பட மொத்தம் 6 சதங்கள் அடித்து மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் சாதனைக்கு நிகரான சாதனையை புரிந்த விராட் கோலி, இன்றைய மெல்போர்ன் டெஸ்டில் 82 ரன்கள் எடுத்த சமயத்தில், ஸ்டார்க்கின் பந்தில் சிக்சர் அடிக்க முயன்று அவுட் ஆனார்.
அதனால் சதம் அடிக்க முடியாமல் போனது. எனினும் ராகுல் டிராவிட்டின் 16 வருட சாதனையை முறியடித்து கோலியால் ஒரு புதிய சாதனையை செய்ய முடிந்திருப்பதால், கோலியின் ரசிகர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர்.