"என்ன சின்ன புள்ள தனமா இருக்கு"...பொல்லார்டை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

Home > தமிழ் news
By |
"என்ன சின்ன புள்ள தனமா இருக்கு"...பொல்லார்டை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதிய இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.அப்போது தனது விக்கெட்டை பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லார்ட்,நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில்,இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. மிகப் பெரிய இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ஓவர்கள் முடிவதற்குள் நான்கு விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது.

 

இந்நிலையில் 11வது ஓவரை பும்ரா வீசினர்.அப்போது பும்ரா வீசிய  பந்தை பொல்லார்ட் தூக்கி அடித்தார்.உடனே மேலே சென்ற பந்தை பிடிக்க பும்ரா ஓடி வந்தார்.அப்போது பும்ராவின் அருகில் வந்த பொல்லார்ட் திடீரென தனது கையை மேலே தூக்கினார்.இதனால் சற்று தடுமாறிய பும்ரா,சமாளித்து அந்த கேட்சை பிடித்தார்.பும்ரா கேட்ச் பிடிப்பதற்கு ஒரு நொடி இருக்கும் முன்,பொல்லார்ட் தனது கையை திடீரென உயர்த்திய செயல் இந்திய வீரர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது.

 

இந்த போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.பொல்லார்டின் இந்த செயல் குறித்து இந்திய வீரர்கள் நடுவரிடம் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CRICKET, JASPRIT BUMRAH, KIERON POLLARD, 2ND T20I