கேரளாவிற்கு வாங்க...புத்துணர்ச்சி வீடியோவுடன் கேரள சுற்றுலாத்துறை!

Home > தமிழ் news
By |
கேரளாவிற்கு வாங்க...புத்துணர்ச்சி வீடியோவுடன் கேரள சுற்றுலாத்துறை!

எந்தவொரு பயணிக்கும் ஆர்வத்தைத் துண்டுகிற முடிவற்ற சுற்றுலாத் தலங்களை கேரளா கொண்டுள்ளது. அதன் கண்கவரும் இடங்கள் மற்றும் இயற்கை அழகு பெயர் பெற்ற, கேரளா அதன் மலைகள், காயல்கள், கடற்கரைகள், நீர்வீழ்ச்கள் மற்றும் வனஉயிர்களுடன் எந்த வகையான இயற்கை விரும்பிகளையும் நிச்சயம் வசியப்படுத்தும்.

 

இந்நிலையில் கேரள மக்கள் தங்கள் வாழ்நாளில் காணாத பெரும் துயரத்தை தந்துவிட்டு சென்றது ஆகஸ்ட் மாதம் பெய்த கடும் மழை.அதிலிருந்து கேரள மக்கள் முழுவதுமாக இன்னும் மீளவில்லை என்றாலும் பல கடும் சவால்களை கடந்து கேரளாவின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார்கள்.

 

கேரளாவின் வருமானத்தில் பெரும் பங்கு வகிப்பது கேரள சுற்றுலாத்துறை.மாநிலத்தின்  மொத்த வருவாயில் கேரள சுற்றுலாத்துறையின் பங்களிப்பு மட்டும் 10 சதவீதம் ஆகும்.ஆண்டிற்கு சுமார் 35,000 கோடி ரூபாய் அளவிற்கு சுற்றுலா துறை மூலம் வர்த்தகம் நடைபெறுகிறது. இதன் மொத்த வருவாயையும் புரட்டி போட்டு விட்டது கேரள வெள்ளம்.

 

இந்நிலையில் அதன் பாதிப்பிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் கேரளா,தாங்கள் சுற்றுலாவிற்கு தயாராகி விட்டதை குறிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் .அதில் "கேரளா ஈஸ் ஓப்பன்" என்ற பதாகைகளுடன் மக்கள் நின்று கொண்டு கேரளாவிற்கு வருமாறு மக்களை அழைக்கும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

KERALA, KERALAFLOOD, KERALAISOPEN, KERALA TOURISM